Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இளைஞர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்” மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சரின் நேரடி ஆய்வு…!!

தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கும் இடத்தை  அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஜி.கே உலக பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வருகிற 12-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் பங்கு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் செய்துள்ள முன்னேற்பாடுகளை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் 31 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

Categories

Tech |