Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளைஞர்களே..! தமிழகத்தில் மே 6 ஆம் தேதி…. மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பல்வேறு இடங்களில்  தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தேனியில் வருகிற 6ம் தேதி அன்று தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது.

மேலும் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதால்,  தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை  (மே.6) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அத்துடன் பட்டப்படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள தையல் மற்றும் தொழிற் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இணைந்து கொள்ளலாம். இதையடுத்து இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், தங்களின் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் வருகை புரிய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தின் 04546-254510 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |