3 மாதங்கள் கழித்து கஞ்சா புகைத்ததால் ஆணுறுப்பில் ஏற்பட்ட விரைப்பை தொடர்ந்து வலியினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த நபரொருவர் அதனை கத்தியை கொண்டு முழுவதுமாக துண்டித்துள்ளார்.
தாய்லாந்தை சேர்ந்த நபரொருவர் கடந்த 2 ஆண்டுகளாக கஞ்சா புகை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். ஆனால் அந்த நபர் கஞ்சா புகை பிடிக்கும் பழக்கத்தை கடந்த 3 மாதங்களாக நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் கஞ்சா புகைத்ததால் அவருடைய ஆண் உறுப்பு பாலியல் எண்ணம் தோன்றாமலேயே விரைத்துள்ளது.
அதுமட்டுமின்றி அதில் மிகக் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அலறித் துடித்த அந்த தாய்லாந்தை சேர்ந்த நபர் ஆண்குறியின் தோலை கத்தரிக்கோலை கொண்டு பலமுறை துண்டித்துள்ளார். அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்த அந்த நபருடைய ஆணுறுப்பில் மீதம் 2 சென்டிமீட்டர் மட்டுமே இருந்துள்ளது.
இதனையடுத்து தாய்லாந்தை சேர்ந்த அந்த நபருக்கு 2 மணி நேரம் ரத்தம் நிற்காமல் சென்றதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவருக்கு பறவைகள், பூச்சிகளின் சத்தம், நிழல்கள் அசைவது போன்ற மாயத் தோற்றங்களை கண்டதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு உடல்நிலையில் தேறியுள்ளது.