தமிழ்நாடு காவல்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய சீருடை துறைகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றது.
அந்த வகையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரி நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி வகுப்புகள் இந்த மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதை சென்னை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.