கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இதயத்தை தாக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை மீண்டும் புதிய அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.
தற்போது பரவும் கொரோனாவால் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தொற்று இதயத்தை தாக்கி செயலிழக்க செய்து உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா பரிசோதனை செய்தால் நம்மை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வார்கள் என்று பயப்படவேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.