பெண்ணின் பெயரில் போலி facebook ஐடி வைத்திருந்த ஒருவரிடம் நிர்வாணமாக சாட்டிங் செய்த இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் திருமணம் ஆகாத இளைஞர் ஒருவருக்கு பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அது வாட்ஸ் அப் மூலம் நிர்வாணமாக சாட்டிங் செய்வது வரை சென்றுள்ளது. இந்த நிர்வாண சேட்டிங்கை பதிவு செய்த அந்த நபர், இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்ட, மனம் உடைந்த அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இது போன்ற மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் வசமாக ஒருவரை சிக்க வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.