பெரம்பலூர் அருகே ஒரே ஸ்கூட்டியில் பயணித்த 5 இளைஞர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுவது சிலர் போக்குவரத்து விதி முறைகளை கடைப் பிடிக்காமல் இருப்பது தான். அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு, சிலர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுகிறார்கள். அதனால் பெரும்பாலான இழப்புகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி ஒருவரின் அலட்சிய போக்கால் குடும்பமே பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஒரே வண்டியில் பயணம் செய்வதால், சாலை விபத்து ஏற்படுகிறது.
அது போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி அருகே, ஒரே ஸ்கூட்டியில் ஐந்து இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த வாகனம் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டாவது இனி அதிக நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.