இளைஞர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கல்லூரி மாணவர்களிடம் பேசியதாவது, லயோலா கல்லூரி என்னுடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் படித்த கல்லூரி. உதயநிதி என்னுடைய நண்பர். அவருடைய நண்பனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இந்தக் கல்லூரி எனக்கு பரிச்சயமான கல்லூரி. படிப்பு முக்கியம் என்றாலும் சமுதாய அக்கறை மற்றும் நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் எழுப்புவது லயோலா கல்லூரி தான். இங்கே பற்றும் நெருப்பு தான் அனைத்து மாணவ சமுதாயத்திடமும் பரவும்.
இளைஞர்களின் கையில் தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது. மத்திய அரசின் ஆய்வின்படி 15 சதவீதம் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதன் காரணமாகத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளார். அனைத்து இளைஞர்களும் மொழிப்பற்று நாட்டுப்பற்று மூலமாக ஒன்றிணைய வேண்டும். உலக அளவில் இந்தியாவில்தான் இளைஞர்கள் சக்தி அதிக அளவில் இருக்கிறது. உங்களுக்கு அட்வைஸ் கூற நான் விரும்பவில்லை. ஏனெனில் அனைத்து நல்லது கெட்டதும் உங்களுக்கு தெரியும். மேலும் சமுதாய நலனில் மாணவர்களாகவே நீங்கள் உங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என கூறினார்.