இளைஞர்களுக்கு இலவசமாக 2 கோடி ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என்று உத்திரபிரதேச பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்துக்கான மாநில பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா இன்று தாக்கல் செய்தார். இதில் 2002 23 ஆம் நிதி ஆண்டிற்கு ரூபாய் 6.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்காக 39,181.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:
பெண்களுக்காக மாநில அளவில் சைபர் உதவி பிரிவுகள் அமைக்கப்படும். இதற்காக 72.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மிஷன் சக்தி திட்டத்தின்கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகள் விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 650 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
2022-23 ஆம் நிதியாண்டில் 15 ஆயிரம் சோலார் பம்புகள் பொருத்தப்படும். மேலும் விவசாயிகளுக்கு 60 லட்சம் குவிண்டால் விதை வழங்கப்படும்.
இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
சுவாமி விவேகானந்தர் இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வீட்டுக்கு அருகிலேயே பயிற்சி அளித்த முதல்வர் அபியுதயா யோஜனா திட்டம் கொண்டு வரப்படும் .
அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
100 நாள் வேலை திட்டத்தில் முப்பத்தி இரண்டு கோடி வேலை நாட்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
கிராமத் தொழில் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு 800 தொழில்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.