டிஜி வைணவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் டிஜி வைணவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். மேலும் இதில் கல்லூரியின் செயலாளர் அசோக்குமார், முதல்வர் எஸ். சந்தோஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். வெங்கட்ராமன், கல்லூரியின் துணைத் தலைவர் கோபால் அகர்வால் அசோக், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர். என். ரவி கூறியதாவது. நமது நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் தலைமையில் நமது நாடு சிறப்பான இலக்கை முன்னேறிக் கொண்டிருக்கிறது. மேலும் வேளாண்மை, தொழில், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், விண்வெளி என பல்வேறு துறைகளில் முழுமையான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா நோய் தொற்று, பருவ காலம் மாறுபாடு போன்ற பல நோய்கள் பரவி வருகிறது. இந்த மாதிரி காலகட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு செலுத்தி வருகிறது.
இதற்கு காரணம் நமது பிரதமர் நரேந்திர மோடி. மேலும் சர்வதேச சூரியனின் கட்டமைப்பில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளது. இதனையடுத்து நமது நாட்டின் மிகப் பெரிய சக்தியாக இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது வாழ்வில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய அதற்கான கணவவை காண வேண்டும். மேலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். புதிய இந்தியாவை படைப்பதில் இளைஞர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். புதிய சிந்தனைகளை உருவாக்கி அதனை துணிவுடன் செயல்படுத்த முன்வர வேண்டும். இந்நிலையில் நிதி ஆயோக் போன்ற மத்திய அரசின் திட்டங்களில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இளைஞர்கள் புதிய முயற்சியை மேற்கொள்ளும் போது பல தோல்விகள் ஏற்படலாம். அவற்றை ஒரு பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அதனை ஒரு தோல்வியாக கருதி ஒதுக்கி விடக்கூடாது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.