ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்தே கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிரேமபுரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் என்பவரை ஐந்துபேர் கட்டையால கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி வைரலானது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஜஸ்டிஸ்கும் அதே கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முகேஷ் கண்டித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் கடந்த வியாழக்கிழமை ஜஸ்டிசை உறவினர்கள் உதவியுடன் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு உடலை ஜஸ்டிஸ் வீட்டின் அருகே வீசி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகேஷ் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் என 11 பேரை கைது செய்துள்ளனர்.