Categories
மாநில செய்திகள்

இளைஞரை கடத்தி…. இளம்பெண் செய்த செயல் …..தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர், வாலிபர் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து முடித்து, தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து, தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன், முகநூலின் மூலம் பழகியுள்ளார்.

இதையடுத்து மாரிமுத்துவிடம், ராகினி என்ற அந்த இளம்பெண் பணக்கார பெண்ணாக, தன்னை காட்டிக்கொண்டுள்ளார். மேலும், அப்பெண் மாரிமுத்துவை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு ஆசை வார்த்தைகள் பேசி மயக்கியுள்ளார். மேலும், தனக்கு பணத்தேவை இருப்பதாகவும்  கூறி, 5 லட்சம் ரூபாயை, மாரிமுத்துவின் வங்கி கணக்கின் மூலம்,ஏமாற்றி  பெற்றுள்ளார்.

அதன் பின், அந்த பெண், மாரிமுத்துவிடம் இருந்த தொடர்பையும்  துண்டித்து, பிறகு மாரிமுத்துவின் உறவினரான, தென்காசி காவல்துறையில் சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை காவலராக பணியாற்றும் வில்வதுரை என்பவரை, ராகினி காதல் வலையில் சிக்கவைத்துள்ளார். மேலும்  இவரிடம் இருந்தும், 15 லட்சம் வரை ஏமாற்றியதாக தெரிகிறது.

இதையடுத்து காலப்போக்கில் ராகினியுடன் ,வில்வதுரை மற்றும் அவரது நண்பர் இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி (29) மற்றும் ரவிக்குமார் உள்ளிட்டோர் பழக தொடங்கினர். இதன் பின், 4 பேரும் மோசடி குழுவாக செயல்பட்டு, 50 லட்சம் வரையிலும், பல ஆண்களிடம் இருந்து, இவ்வாறு சுருட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரிமுத்து, ராகினியிடம் கொடுத்து ஏமார்ந்த பணம்,   வில்வதுரையிடம் மற்றும் ராகினியிடம் கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக,  மரிமுத்துவை தீர்த்து கட்டுமாறு, வில்வராஜிடம் ராகினி கூறியுள்ளார். ஆகவே அதன்படி, கடந்த மாதம் 27-ந்தேதி மாரிமுத்துவுக்கு, அவரது பணத்தை ராகினி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறி, மாரிமுத்துவை சங்கரன்கோவிலுக்கு காரில் கடத்தி வந்துள்ளனர்.

அதன் பிறகு, அங்கு வந்து அவரது கழுத்தை இறுக்கி, கொலை செய்துவிட்டு, பின் அங்குள்ள கண்மாயில் கல்லை கட்டி, அவரது உடலை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, மாரிமுத்துவின் உடலை அழுகிய நிலையில், போலீசார் மீட்டு, காவலர் வில்வதுரை, நண்பர் இசக்கிராஜா மற்றும் ரவிக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மோசடி பெண் ராகினி மற்றும் இளவரசியை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த இசக்கிராஜாவின் மனைவி இளவரசியையும் போலீசார் கைது செய்து, இதனை தொடர்ந்து ராகினியையும்  தேடி வருகின்றனர்.

Categories

Tech |