சென்னையில் இளைஞர் ஒருவரை அடித்து எரித்துக்கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ,மதுரவாயலில் இளைஞரை கொலை செய்து எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு ஜெகன்நாதன் என்பவரது எறிக்கப்பட்ட சடலம் பல்லவர் நகர் காலி மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டது.
விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சத்யராஜ் ,முருகன், சதீஷ்குமார், ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. முருகனின் மனைவிக்கும் ஜெகன்நாதனுக்கும் இடையே தவறான தொடர்புஇருந்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது