Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவை நினைக்கத் தூண்டிய மகாராணியாரின் மரணம்…. நெகிழ்ச்சியில் இளவரசர் வில்லியம்….!!!!

மகாராணியாரின் சவப்பெட்டிக்கு பின்னால் நடந்து சென்றது தனது தாயின் இறுதி சடங்கை நினைவுபடுத்தியதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு பின்னால் இளவரசர் வில்லியமும் ஹரியும் நடந்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அனைவருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இளவரசி டயானா இறந்த போது இளவரசர் வில்லியமுக்கும் ஹாரிக்கும் வெறும் 15, 12 வயதே ஆகும். அவ்வளவு சிறிய வயதில் தங்களுடைய தாயை இழந்து விட்டு அவர் எதற்காக இறந்தார் என்று கூட சரியாக தெரியாமல் குழப்பத்திலும் துக்கத்திலும் தங்கள் தாயின் சவப்பெட்டியின் பின்னால் தனது தந்தையுடன் இளவரசர் வில்லியமும் ஹாரியும் நடந்து சென்றனர்.

இளவரசி டயானாவை நினைவுபடுத்திய மகாராணியாரின் மரணம்: நெகிழ்ந்த இளவரசர் வில்லியம்... | Queen S Death Remembers Princess Diana

முன்னதாக தனது தாய் இறப்பு குறித்து வில்லியம் பேசுகையில் “இந்த வலி வேற எந்த வலிக்கும் இணையானது கிடையாது” என்ரூ கூறியுள்ளார். அதே போல் இளவரசர் ஹாரி கூறியதாவது “தனக்கு நிகழ்ந்தது போல் வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் தாங்கள் வாழ்ந்த சான்றோம்கான் இல்லத்தின் முன்பு மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மலர் கொத்துகளை பார்வையிட்டுள்ளனர்.

இளவரசி டயானாவை நினைவுபடுத்திய மகாராணியாரின் மரணம்: நெகிழ்ந்த இளவரசர் வில்லியம்... | Queen S Death Remembers Princess Diana

அந்த சமயத்தில் இளவரசர் வில்லியம் அங்கிருந்த மக்களிடம் உரையாற்றியதாவது “நான் என் பாட்டியின் சவப்பெட்டிக்கு பின்னால் நடந்து சென்ற போது என்னுடைய தாயின் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வருகின்றது” என்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த கரோலின் என்ற பெண்மணி “உங்கள் துக்கத்தையும் துயரத்தையும் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி” என்று கூறியுள்ளார். அதற்கு வில்லியம் “அவர் எல்லோருக்கும் பாட்டி தானே” என்று கூறியிருப்பதை கரோலின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Categories

Tech |