Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி -மேகனின் பேட்டியால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு குவியும் கோரிக்கைகள் ..!! காரணம் என்ன ?

பிரிட்டன் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஓப்ரா வின்ஃப்ரே உடனான அளித்த பேட்டி சற்றும் எதிர்பாராத விதமாக சுவிட்சர்லாந்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில் ஓப்ரா வின்ஃப்ரே அணிந்திருந்த கண் கண்ணாடி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே அதை போன்ற கண்ணாடிகளை செய்யக்கோரி மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். மேலும் வின்ஃப்ரே அணிந்த கண்கண்ணாடி gotti நிறுவனரான ஸ்வென் கோட்டியால் செய்யப்பட்டது. ஹரி- மேகன் பேட்டிக்காக வின்ஃப்ரே இந்த கண்ணாடியை வாங்கியுள்ளாராம். மேலும் இந்த கண்ணாடி வின்ஃப்ரேவிற்கு பிடித்ததால் இன்னும் 20 ஜோடி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளாராம் .

இதற்கிடையில் இந்த பேட்டி சுவிட்சர்லாந்தில்  வெளியாகி அதனை பார்த்த மக்கள் வின்ஃப்ரேவின் கண்ணாடியால்  ஈர்க்கப்பட்டதால் அதை போன்ற கண்ணாடிகளை வாங்குவதற்காக gotti நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்களாம். இதனால் gotti நிறுவனம் 30 பேர் கொண்ட குழு  தீவிரமாக இந்த கண்ணாடியை  தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாம் .

 

Categories

Tech |