பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்பத்தை விட்டு கலிபோர்னியாவில் குடியேறினார்கள். இந்நிலையில் மேகன் தனது தந்தைக்காக தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதியதை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தம்பதியர் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் அந்த பத்திரிக்கை நிறுவனம் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டதால் அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மோகனுக்கு நஷ்ட ஈடாக £450000 வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.