பிரிட்டன் இளவரசர் காலமானதை தொடர்ந்து தாத்தாவைப் போல் பேரன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் ஹரி தாடியுடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுக்குறித்து அரச குடும்பத்தின் புகைப்படக்கலைஞர் ஜான்சன் என்பவர் கருத்து பதிவு செய்துள்ளார். அதில் இளவரசர் ஹரி மகாராணியாருக்கும், இளவரசர் பிலிப்பும் மிகவும் பிடித்த பேரன் என்றும் இந்த புகைப்படம் இளவரசர் பிலிப்பின் இளவயது புகைப்படத்தை போன்று காட்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இருவருக்கும் நீல நிற கண்களும், பழுப்பு நிற தாடியும் ஒன்றாக இருக்கிறது என்றும் தாத்தாவை போலவே பேரன் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மக்களும் தாத்தாவும் பேரனும் ஒரேமாதிரியாக இருக்கின்றனர் என்றும் அது தங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.