இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, பேரன் இளவரசர் ஹரி பிரிட்டன் வந்திறங்கியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சலிலிருந்து மதியம் 1:15 மணியளவில் ஹீத்ரோவிற்கு வந்தடைந்துள்ளார். அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திலிருந்து, அவரை சந்தித்து கருப்பு ரேஞ்ச்ரோவரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் இளவரசர் ஹரியின் வருகைக்காக ஏராளமான காவல்துறையினர் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே ஹரி கென்சிங்டன் அரண்மனைக்கு தற்போது சென்றிருக்கிறார்.
அதன் பிறகு அவர் நாட்டிங்காம் மாளிகையில் தங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் மேகனும் ஹரியுடன் செல்வதற்காக தயாராக இருந்துள்ளார். எனினும் அவர் கர்ப்பிணியாக இருக்கும் காரணத்தால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பிரிட்டன் வரவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் வரும் 17ம் தேதி என்று இளவரசன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இதில் கொரோனா காரணமாக 30 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள்.