Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணிற்கு மறுவாழ்வழித்த மருத்துவர்கள்”… 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை…!!!!!

சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது. பல வகையான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் கட்டி குறையவில்லை மேலும் கதிர்வீச்சு சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்த சூழலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த இளம் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இது பற்றி கீழப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சாந்தி மலர் பேசியபோது கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை செயல்பட்டு  கொண்டிருக்கிறது. அங்கு கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட 21 வயது பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரான்ட்ஸ் டியூமர் என அரிதான கட்டி கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயியல்  துறை பேராசிரியர் டாக்டர் சுப்பையா சண்முகம் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த கட்டி கல்லீரல் மற்றும் குடலுக்கு இரத்தத்தை வழங்கும் அடிவயிற்றில் உள்ள பெரிய ரத்தக் குழாய்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். உடனடியாக நோயாளி இளம் வயதை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

அதன்படி கல்லீரல் மற்றும் குடலுக்கு ரத்த ஓட்டத்தை பாதுகாப்பதற்கும் மிகவும் நுணுக்கமான மற்றும் தொழில்நுட்ப ரீதியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்த  இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக செய்த மருத்துவர்கள் குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பெண் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிருக்கிறார். மேலும் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவிற்கு நன்றி தெரிவித்து அந்த இளம் பெண் கடிதம் அளித்துள்ளார் என அவர் தெரிவிதுள்ளார்.

Categories

Tech |