புதிய நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர் உலகினை இணைப்பதில் விண்வெளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றி மற்றும் திருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என அவர் குறிப்பிட்டார். மேலும் விண்வெளித்துறையில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளதாகவும் அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்ட ஒரு நாடாகவும் உள்ளது என்பதை எண்ணி பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.