இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டா மாவட்டத்தில் 23 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் ஜாவித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 14-ஆம் தேதி ஜாவித் இளம்பெண்ணை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இளம் பெண்ணை ஒரு அறையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து மதமாற்றம் செய்யுமாறு கூறியுள்ளார். அதன் பிறகு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஜாவித் தன்னுடைய நண்பர்கள் 2 பேரையும் அழைத்து வந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் இளம்பெண்ணை கொலை செய்து விடுவோம் என ஜாவித் மற்றும் அவருடைய நண்பர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி காலனிகஞ்ச் ரயில்வே நிலையத்தில் இளம் பெண்ணை இறக்கி விட்டுவிட்டு ஜாவித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜாவித் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.