Categories
மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாநிலம், திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவல் துறை அதிகாரியான ஜாக்சன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு முறை இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது ஜாக்சன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி அவரை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல்துறையினர் ஜாக்சன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த காவலர் மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |