Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் ஏமாற்று வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரிச்சேரி புதூர் மேற்கு அண்ணா நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மோகனசுந்தரம்(31) என்ற மகன் உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மோகனசுந்தரம் பட்டதாரி பெண் ஒருவருக்கு தனது நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மோகனசுந்தரம் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மோகனசுந்தரம் ஒரு விடுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் திருமணத்தை பற்றி பேசும்போது மோகனசுந்தரம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனசுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வாலிபருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |