Categories
உலக செய்திகள்

இளம்பெண்களே இப்படி பண்ணலாமா… முதியவர்கள் போல வேஷம் போட்டு… எதை வாங்கினார்கள் தெரியுமா?

முக கவசத்தின் உதவியுடன் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர் போன்று வேடமிட்டு மதுபானங்கள் வாங்கும் காணொளி வெளியாகியுள்ளது

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதையே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர்கள் போன்று வேடமிட்டு முக கவசம் அணிந்து கொண்டு தங்களது அடையாள அட்டை இல்லாமல் மதுபானங்களை வாங்குகின்றனர். அதோடு இதனை காணொளியாக பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டு லைக்குகளையும் பெறுகின்றனர்.

சிலர் இச்செயலை பாராட்டினாலும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். முக கவசம் அணிவதை தவறாக பயன்படுத்துவது சட்டவிரோதமானது என பலரும் கூறி வருகின்றனர். வெளியான காணொளி ஒன்றில் பெண் ஒருவர் முகத்திற்கு பூசும் பவுடரை தலையில் பூசிக்கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து முதியவர் போன்று காட்சியளிக்கும் உடைகளைப் போட்டுக் கொள் கொள்கிறார்.

இதன் பின்னர் கடையை சென்றடைந்ததும் மது பாட்டில்களுடன் வரும் பெண்ணொருவரை அவரது தோழிகள் துள்ளிக்குதித்து வரவேற்கின்றனர் இதனை அவர்களது வீட்டில் பணிபுரிந்து வந்த பெண்மணி காணொளியாக பதிவு செய்து வெளியிட்டதால் இச்சம்பவம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது இதுபோன்ற தகாத செயல்களில் பலரும் ஈடுபட்டு வருவதனால் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகளும் எழுந்து  உள்ளது

Categories

Tech |