Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இளநரை, முதுநரை இருக்குனு கவலை வேண்டாம் … இதை ட்ரை பண்ணுங்க…!!!

இளநரை ,முதுநரை,தீர்வை இந்த தொகுப்பில் காணலாம் : 

இளம் வயதினர் கூட நரை முடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு அது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது சத்து குறைபாட்டால் இருக்கலாம். இதற்கு கெமிக்கல் முறையில் தீர்வு காணும் போது பல பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய அபாயம் வரும். அதனால் இயற்கை முறையில் ஒரு சிறந்த மருத்துவத்தை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 2 ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

நெல்லிக்காய் பவுடர் – சிறிதளவு

கருவேப்பிலை பவுடர் – சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு இரும்பு கடாய் அல்லது மண் சட்டியை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து வெந்தயம், மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் லேசான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஆற வைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் சிறிது நெல்லிக்காய் பவுடர் மற்றும் கறிவேப்பிலை பவுடர் சேர்த்து அதன் வண்ணம் மாறும் வரை லேசான தீயில் வறுக்க வேண்டும்.

பிறகு வேறொரு வானொலியில் 100 மில்லி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடி செய்து வைத்திருந்த வெந்தயம்,மிளகு, கருஞ்சீரகம் பொடியை போட வேண்டும்.

அடுத்து  நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை கலவையை அதில் போட்டு கலந்து விட வேண்டும்.5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

அடுத்தது இரவு முழுவதும் அந்த எண்ணெய்யை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலையில் ஒரு வடிகட்டி அல்லது நல்ல துணி கொண்டு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம் அல்லது இரவில் நன்கு மயிர்க்கால்களில் படும்படி எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு கொண்டு தலையை கழுவி விடலாம். இதனால் இளநரை நீங்கி கருமையாக முடி வளரும். முதுநரை தோன்றுவதையும் தள்ளி போடலாம்.

Categories

Tech |