உக்ரைன்-ரஷ்யா போரால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கல் உருவாகும். பெட்ரோல் விலை உயர்வு ஆண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
மறுபக்கம் இல்லத்தரசிகளுக்கு கவலையளிக்கும் வகையில் சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் 100 முதல் ரூபாய் 200 வரை சிலிண்டர் விலை உயரும் என்றும், இந்த விலையேற்றம் மார்ச் மாதம் முடிந்ததும் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றி அமைக்கப்படும். ஆனால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் சிலிண்டர் விலை ஏப்ரல் 1-ஆம் தேதி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.