Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000… கேரளாவில் கெத்து காட்டிய காங்கிரஸ் அறிக்கை..!!

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை தக்கவைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது. மக்கள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட இதில் பல்வேறு வாக்குறுதிகள் இருந்தது.

இதில் முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வெள்ளை ரேஷன் கார்டுகளுக்கு 5 கிலோ இலவச அரிசியும், 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணமான பெண்களும் அரசு வேலைகளை வாங்கும் பொருட்டு அரசு தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு இலவச உணவு பொருட்கள், இலவச மருத்துவம் போன்ற வசதிகளை செய்துதர வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |