Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

கோவாவில் வரும் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளதால், கடுமையான போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார்.

மம்தா பானர்ஜியின் கனவு அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறலாம். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை கவரும் வண்ணம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், கோவா மாநில இல்லத்தரசிகளை கவரும் வகையில் கிரிஹா லக்க்ஷ்மி என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அவை என்னவென்றால், கோவா மாநிலத்தில் உள்ள 3.5 கோடி குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு வழங்குவதன் மூலம் ஆண்டு வருமானம் 60,000 ரூபாயாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கு 1500 கோடி ரூபாய் முதல் 2,000 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அந்த மாநில பட்ஜெட்டில் 6 முதல் 8% அளவாகும். மேலும் கிரிஹா லக்க்ஷ்மி திட்டம் பற்றி தொடர்ந்து பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால் கோவா மாநிலத்தின் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுபற்றி பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியும், கோவா மாநில கட்சி பொறுப்பாளருமான மகுவா மொய்த்ரா கிரிஹா லக்க்ஷ்மி திட்டம் மிகவும் அற்புதமான ஒன்று. இதேபோல் ஒரு திட்டத்தை மேற்கு வங்கத்தில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறோம். முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு தேர்தலை ஒட்டி லகிர் பந்தர் என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிமுகப்படுத்தினார்.

அவை என்னவென்றால், எஸ்சி ,எஸ்டி சமூக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயும் பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 500 ரூபாயும் கிடைக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதால் மேற்குவங்க மாநிலத்தில் நடந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், கோவா மக்களை திரிணாமுல் காங்கிரஸ் ஏமாற்ற பார்க்கிறது.

இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு போதிய ஆதாரங்கள் வேண்டும். ஏற்கனவே ஆளும்கட்சியாக இருக்கின்ற மேற்குவங்கத்தில் மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாமல் இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் கோவா மக்களுக்கு எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடியும். எனவே இவர்கள் கூறுவதை நிறுத்த முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |