தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களுக்கான தேவைகளை அறிந்து அதை செயல்படுத்தி வருவதில் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் நாளுக்குநாள் பபுதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் கல்வி கற்கும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது. மேலும் இலவச மிதிவண்டி, இலவச பஸ்பாஸ், இலவச சீருடை ஆகிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வேளச்சேரியிலுள்ள அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். இதையடுத்து நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது என்று தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் தேர்தல் அறிக்கையில் டேப் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், மடிக்கணினிதான் சிறந்தது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மீண்டும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இப்போது அரசு பள்ளிகளில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடுதலாக ஒரு தகுதிதேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் விரைவில் குணமடைந்து திரும்பிய பிறகு இலவச மிதிவண்டி, இலவச சிற்றுண்டி திட்டத்தினை தொடக்கி வைப்பார் என செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.