ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தேரிருவேலி, திருவரங்கம் மற்றும் கமுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் அரசு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது வாகித், காசநோய் முதுநிலை மேற்பார்வையாளர் மோகன பாலன், தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் காசி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்துள்ளனர்.