தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. அதுபோக பள்ளி அலுவலகங்களில் மீதமுள்ள விலையில்லா மடிக்கணினிகளை ஆசிரியர்களின் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
அதாவது, மாவட்டங்களில் இருப்பில் உள்ள 55819 இலவச மடிக்கணினிகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலமாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்திற்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.