Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்து பயண திட்டத்தால்…. ரூ.1,358 கோடி இழப்பு…. அமைச்சர் தகவல்…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இலவச பயணத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் அரசுக்கு ரூ.1,358 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு ரூ.1,200 கோடி கொடுக்கிறது.  மீதமுள்ள தொகை விரைவில் கொடுக்கப்படும். மேலும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தால் மகளிரின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |