கட்டணமில்லாமலால் 40 நிமிட இலவச அழைப்புகளை பயனர்களுக்கு வழங்கி வரும் ஜூம் செயலிபண்டிகை நாட்களில் அந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
காணொலி நிகழ்வுகளுக்கு மிகவும் பிரபலமாக உள்ள ஜூம் செயலி, பயனர்களுக்கு கட்டணமில்லால், இலவசமாக 40 நிமிட நிகழ்வு சேவை வழங்கி வந்தது. இந்த சேவையை தற்போது வழங்க முடியாது என ஜூம் செயலி தெரிவித்துள்ளது. இதனால் இனி இலவச காணொலி அழைப்புகளை பண்டிகை நாள்களில் மேற்கொள்ள முடியாது.
வெளிநாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் ( தேங்க்ஸ் கிவிங்) நன்றி தெரிவிக்கும் நாளில் இலவச சேவையை ஜூம் செயலி நிறுத்தி இருந்தது. அதே பாணியில் தற்போது கிறிஸ்துமஸ், நியூ இயர் பண்டிகையை கணக்கிலெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஜூம் பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் வீடுகளில் இருந்த பொதுமக்கள் பலரும் ஜூன் செயலியை பயன்படுத்தி கொண்டதால் ஜூம் செயலி உலக அளவில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.