Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி மகளிர் இலவச பயணம்…. இரவோடு இரவாக நடந்த பணி… கண்களில் படும் படி ஒட்டிய வாசகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வாசகம் இரவோடு இரவாக பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றதும் ஐந்து முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்  அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதில் பெரும் முத்தாய்ப்பான அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசாணையை பிறப்பித்தது கையெழுத்திட்டுள்ளார்.

இதனையடுத்து பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவிகள் அனைவரும் அரசு  பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இன்று முதல் பயணம் செய்யலாம் என்று கையெழுத்திட்டுள்ளார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முகப்பு கண்ணாடியில் வில்லை ஒட்டும் பணி இரவோடு இரவாக நடைபெற்றது. இதில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற வாசகம் அனைவரின் கண்களில் படும்படி ஒட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |