இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த யோசனை தெரிவித்துள்ளார்.
இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவது என்பது பெரும் விவாத பொருளாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது. இந்தவிவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்து வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உத்தரவாக எதுவும் இல்லை என்றாலும், வாய்மொழியாக நிறைய முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.. அந்த அடிப்படையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்றமே கூட இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைக்கலாமே என்பது சம்பந்தமாக ஒரு யோசனை முன்வைத்தது.
அதாவது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா மத்திய அரசிடம் நீங்களாகவே ஒரு குழுவை அமைத்து இந்த விவகாரத்தை கலந்து ஆலோசிக்கலாம். இல்லையென்றால் எதிர்கட்சிகள் அனைவரையும் அழைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது குறித்து யோசிக்கலாம். இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாளை ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள்.
அப்படி வரும் பொழுது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய இந்த இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் மாற்றங்களை கொண்டு வர நினைக்கலாம். இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை.. பொருளாதாரத்தை அளிக்கக் கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சம். எனவே நாங்களாக வந்து இந்த விவகாரத்தில் ஒரு உத்தரவை பிறப்பிப்பதை விட அனைவருமே முன்வந்து தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமே என்ற தொனியில் தலைமை நீதிபதி இன்றைய தினம் வாதங்களை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தரப்பு வழக்கறிஞர் துசார் மேத்தா, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம் என்ற விஷயத்தை முன் வைத்தார். அதன்பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கை டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தார்..