Categories
தேசிய செய்திகள்

“இலவசங்களை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது”….. காங்கிரஸ் திடீர் கடிதம்….!!!!

தேர்தல் வாக்காளர்களை கவர இலவசங்களை தருவதாக சில அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாகவும், இந்த இலவச கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசியிருந்தார். இது பற்றி விவாதம் நடத்துவது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இலவச வழங்கும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை அரசியல் கட்சிகள் தெரிவிப்பது கட்டாயம் என்று திருத்தம் கொண்டு வருவது பற்றி கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சி நேற்று பதில் அளித்தது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில், இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது துடிப்பான ஜனநாயக முறையின் அம்சங்களில் ஒன்று. இது வாக்காளர்களின் அறிவு கூர்மைஒ பகுத்தறிவு ஆகியவற்றை சார்ந்தது. அவர்களின் புத்தி கூர்மையை குறைத்து மதிப்பிடக்கூடாது. தேர்தல் வாக்குறுதிகளை அலசி ஆராய்ந்து, அவற்றை ஏற்றுக்கொள்வதா? நிகராகரிப்பதா? என்பதை வாக்காளர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.

எனவே தேர்தல் கமிஷனுக்கோ, அரசாங்கத்துக்கோ, ஏன் கோர்ட்டுகளுக்கோ கூட இந்த பிரச்சனையை நியாயப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவோ அதிகார வரம்பு கிடையாது. எனவே தேர்தல் கமிஷன் இதில் இருந்து விலகி இருப்பது நல்லது. கடந்த காலங்களில் தேர்தல் கமிஷன் இத்தகை அதிகாரத்தை பயன்படுத்தாமல் கட்டுப்பாட்டுடன் இருந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியது, இலவச கலாச்சாரம் குறித்த பிரதமர் பிரச்சினை எழுப்பிய பிறகு தேர்தல் கமிஷன் இதை கையில் எடுத்துள்ளது. ஏழைகள் மற்றும் நலிந்தோர்‌ நலன்கள் பாதுகாப்பதும் அவர்களின் உயர்வுக்காக திட்டங்கள் வகுப்பதும் அரசாங்கத்தின் கடமை. இதை இலவசம் என்று திரிக்க கூடாது. ஏற்கனவே உள்ள சட்டங்களை தேர்தல் கமிஷன் முறையாக அமல்படுத்தி, நேர்மையான சுதந்திரமான தேர்தல் நடத்த வேண்டும். உடனடி கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சனைகள் நிறைய உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |