இலங்கையில் போராட்டக்காரர்கள் மட்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வரும் மோதலில் ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தது. அதனால் சில பகுதிகளில் போராட்டம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் தொடர் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதையடுத்து இலங்கையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற காரை சூழ்ந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது அமர கீர்த்தி எம்பி போராட்டக்காரர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் ஆளும் கட்சி எம்பி அமர கீர்த்தி உயிரிழந்தார். இதையடுத்து இலங்கையில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.