Categories
அரசியல்

இலங்கை விவகாரம்: “இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?”…. மத்திய அரசுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி, டீசல், வலை போன்றவற்றை திருடி சென்றதுடன் நாட்டுப்படகு, விசைப்படகு உட்பட சுமார் 150 படகுகளையும் கைப்பற்றி சென்றுள்ளனர். தற்போது இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து உள்ளது.

இது இறையாண்மைக்கு எதிரான செயலாகும். தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. குடியரசுதினவிழா கொண்டாடவிருக்கும் இந்த சமயத்தில் இலங்கை அரசு இவ்வாறு கீழ்த்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும் இது மொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

Categories

Tech |