இலங்கை இரண்டாம் ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையை சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் ஜூன் 21-ஆம் தேதி வர இருக்கிறது. எப்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை ஜூன் 12ஆம் தேதி லண்டனில் 1400 படைவீரர்கள் மற்றும் 200 குதிரைகள் கொண்ட அணிவகுப்புகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு.
உலக முழுவதும் கடந்த ஆண்டு கொரோனாவின் பிடியில் சிக்கி கொண்டிருந்ததால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு வின்ட்சார் கோட்டையில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் இரண்டாவது ராணி எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.