Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 வருடமாகும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடியானது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என அதிபர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பாக தலைநகர் கொழும்புவில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் முடிவடைந்த பிறகு அதிபர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு நாம் கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என கூறினார்.

நம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்டெடுப்பதற்கு அணுசக்தி மற்றும் தளவாடங்கள் போன்றவைகள் பெரிதும் உதவியாக இருக்கும். இதில் குறிப்பாக தளவாடத் துறையை நான் அதிகமாக நம்புகிறேன். நம்மிடம் அதிக அளவுக்கு எரிசக்தி இருந்தால் அதை இந்தியாவிற்கு விற்கலாம். இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் நாட்டில் மொத்தம் உள்ள 2.10 கோடி மக்கள் தொகையில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் தங்களுடைய வேலைகளை இழந்து வருவதால் அவர்களை வேண்டிய உதவிகளையும் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Categories

Tech |