Categories
உலக செய்திகள்

இலங்கை: பதவியேற்ற புது அமைச்சர்கள்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இலங்கை நாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புது அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதாவது, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அந்நாட்டின் புதிய பிரதமராக தினேஷ்குணவா்தன இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

அந்த நாட்டின் அதிபராகயிருந்த கோத்தபயராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அதன்பின் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபராக ரணில்விக்கிரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

Categories

Tech |