Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம்: “கோ ஹோம் கோத்த” என கோஷம் எழுப்பி போராட்டம்…. பரபரப்பு….!!!!

இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் “கோ ஹோம் கோத்த” என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென்று அங்கிருந்து வெளியேறினார்.

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் கோத்தபயராஜபக்சே வருகை தந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களையும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் மேற்கொண்டனர். அதாவது “கோ ஹோம் கோத்தபய” என்ற கோஷத்துடன் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற அவையைவிட்டு வெளியேறினார்.

இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பேசியபோது, மீண்டுமாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவர் கூறியதாவது, “கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் பிரதமரும், அவரது அரசாங்கமும் சரியாக செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதேபோன்று மற்ற எதிர் கட்சிகளின் உறுப்பினர்களும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியதால் இன்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

Categories

Tech |