இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி நேற்று இரவு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார்.
இலங்கையில் 35 வயதுடைய அங்கொட லொக்கா நிழல் உலக தாதாவாக இருந்து வந்துள்ளார். அவர்மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு ஆகிய வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் தலைமறைவாக கோவை சேரன் மாநகர் பகுதியில் தங்கியிருந்தார். அதன் பின்னர் கடந்த மாதம் மூன்றாம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரின் சடலத்தை அவருடைய காதலி அம்மனி தான்ஷி, மதுரையை சார்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் மதுரைக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.
அவர்கள் அனைவரும் பிரதீப் சிங் என்ற பெயரில் போலியான ஆவணங்களை திரட்டி, அதன்மூலம் ஆதார் அட்டையை தயாரித்து அங்கொட லொக்காவின் உடலை எரித்து உள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அந்த வழக்கை கோவை பீளமேடு காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கடந்த 12ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவரின் மற்றொரு கூட்டாளியான சமிந்தா சந்தமால் எதிரி சூர்யா என்ற 41 வயதுடைய நபர் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.