பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக அதிபர் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலத்தீவு மக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை வெளியேறுமாறு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அவர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இன்று காலை 11:30 மணி அளவில் சிங்கப்பூர் செல்லும் வானத்தில் ஏறி உள்ளார் என்றும், இன்று இரவு 7 மணி அளவில் சிங்கப்பூரை சென்றடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்தினர் தனிப்பட்ட பயணமாக தான் சிங்கப்பூருக்கு வருகின்றனர் எனவும், தஞ்சம் அடைவது தொடர்பாக எங்களிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும் தஞ்சம் வழங்குவதற்கு எந்த வித ஒப்புதலும் வழங்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.