Categories
உலக செய்திகள்

இலங்கையை நாங்கள் கண்காணித்து கொண்டேதான் இருக்கிறோம்…!! ஐக்கிய நாடுகள் சபை பேச்சு…!!

இலங்கையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் கூறியதாவது, மிரிஹானவில நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து இலங்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கை மக்கள், பென்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு வீதியிலும் மார்ச் 31ஆம் தேதி இரவு முற்றுகையிட்டனர் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் கலவர தடுப்பு காவல் துறை பிரிவினர் ஜனாதிபதி இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பைப் பலப்படுத்தினார். அதோடு இலங்கை ராணுவமும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுபோல போராட்டம் நடத்துபவர்களை கலவர தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வோம் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |