இலங்கையில் உயர் அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதிகள்நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு வழக்குகளின் கீழ் ஏராளமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை மூலம் முன்கூட்டியே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனாலும் அலட்சியமாக செயல்பட்டதால் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயசுந்தரா மற்றும் பெர்னாண்டோ இருவரும் ஜாமீனில் விடுதலை ஆன பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் கொழும்பு ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் இவர்கள் இருவர் மீதான வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது . இந்த வழக்கு குறித்து ஐகோர்ட் ஜெயசுந்தரா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.