இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் இலங்கையிலிருந்து தமிழகம் வர முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மன்னார் பேசாலை பகுதி வழியாக வர முயற்சித்த இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 சிறுவர்களும், 5 பெண்களும் அடங்குவர். அதன்பிறகு இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட 14 தமிழர்களையும் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.