Categories
உலக செய்திகள்

இலங்கையில் துப்பாக்கி சூடு சம்பவம்….!! விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு…!!

இலங்கை 70 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

அந்தவகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |