Categories
உலக செய்திகள்

இலங்கையில் கவிழும் ஆட்சி?…. வரும் 17ஆம் தேதி நடக்கும் முக்கிய விவாதம்….!!!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அதிபருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் இந்த தீர்மானம் மீதான விவாதம் வருகின்ற 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு ஒப்புதல் பெற்று மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கட்சித் தலைவர்கள் இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளையும் கூறியுள்ளனர். அதன்பிறகு சபாநாயகர் இவை அனைத்தும் அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |