அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால் இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியுள்ளது. அத்துடன் உணவு மற்றும் எரிப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கை நாட்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 2 லட்சமாக அதிகரித்துள்ளது.